இங்கிலாந்து டெஸ்ட் தொடர் – இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்தாண்டு ஜூன் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் இது என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரை தொடர்ந்து இங்கிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் எதிர்கொள்கிறது இந்திய அணி. அதாவது, இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர்..!

அதன்படி, இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. 2-வது போட்டி பிப்ரவரி 2 முதல் 6-ம் தேதி வரை விசாகப்பட்டினத்திலும், 3-வது போட்டி பிப்.15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ராஜ்கோட்டிலும், 4-வது போட்டி பிப். 23-ம் தேதி முதல் 27- ம் தேதி வரை ராஞ்சியிலும், 5-வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 7-ம் தேதி தரம்சாலாவிலும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், குறிப்பாக இந்திய டெஸ்ட் அணியில் இளம் வீரர் த்ருவ் ஜுரேல் முதல் முறையாக சர்வதேச போட்டியில் அறிமுகமாகிறார்.

முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், கே.எஸ். பரத், த்ருவ் ஜுரேல் (அறிமுகம்), அஸ்வின், ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான்.

Recent Posts

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

37 minutes ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

1 hour ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

2 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

4 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

5 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

5 hours ago