Ruturaj Gaikwad speech [File Image]
Ruturaj Gaikwad : உடனடியாக சென்னை அணியில் அடுத்த போட்டி என்பது எங்களுக்கு கடினமானது என சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மே 10-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 231 ரன்கள் எடுத்து 232 என்ற பெரிய இலக்கை சென்னை அணிக்கு நிர்ணயித்தது.
அடுத்ததாக 232 என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக குஜராத் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தோல்விக்கான காரணம் பற்றி பேசினார். இது தொடர்பாக பேசிய அவர் ” இந்த போட்டியில் நாங்கள் 10 லிருந்து 15 ரன்கள் வரை அதிகமாக கொடுத்துவிட்டோம் என்று நினைக்கிறன்.
குஜராத் அணி பேட்டிங் செய்த போது எங்களுடைய பீல்டிங் கொஞ்சம் சொதப்பலாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். போட்டிக்கு முன்னதாக நாங்கள் பேசி வைத்து இருந்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தினோம் ஆனாலும், அவர்களுடைய பேட்ஸ்மேன் நன்றாக விளையாடினார்கள். குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை நாங்கள் செட் ஆகவிட்டுவிட்டோம் என்பதால் இவ்வளவு பெரிய இலக்கு வந்தது. அவர்களை எங்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
இந்த போட்டிக்கு பிறகு அடுத்தாக நாங்கள் சென்னை மைதானத்தில் வைத்து எங்களுடைய அடுத்த போட்டியில் விளையாட இருக்கிறோம் என்பதும் கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது. இந்த போட்டிக்கு பிறகு இடைவெளி கூட இல்லாமல் ரொம்பவே சீக்கிரமாக எங்களுக்கு அடுத்த போட்டி வருகிறது. அதுவும் அடுத்த போட்டிகள் எல்லாம் எங்களுக்கு ரொம்பவே முக்கியமான போட்டி சென்னையில் ஆடப்போகும் போட்டிகள் எல்லாம் எங்களுக்கு கடினமாக தான் இருக்கும்.
எனவே, அந்த கடினங்களை எல்லாம் எப்படி சமாளித்து சரியாக விளையாடவேண்டும் என்பதில் திட்டமிட்டு சிறப்பாக செயல்படுவோம்” எனவும் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். மேலும், மே 12-ஆம் தேதி சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…