இன்ஸ்டாகிராமில் 70 லட்சம் ஃபாலோவெர்ஸ்களைப் பெற்ற முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அணிகளில் முதன்மையானதாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(சிஎஸ்கே).மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி,அனைத்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.வேறு எந்த அணியும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை.அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர் பட்டாளம் நிறைய உள்ளனர்.இதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் சிஎஸ்கே அணி தனக்கான கூட்டத்தை கவர்ந்து வருகிறது.
அதன் படி,சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 70 லட்சம் ஃபாலோவெர்ஸ்களைப் பெற்றுள்ளது.அதனைக் கொண்டாடும் விதமாக,தோனியின் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் சென்னை அணியை அடுத்து, 69 லட்சம் ஃபாலோவெர்ஸ்களைப் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.அதனை தொடர்ந்து,பெங்களூர் ராயல் சேலஞ் அணி 61 லட்சம் ஃபாலோவெர்ஸ்களுடன் 3 வது இடத்தில் உள்ளது.மேலும்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,டெல்லி கேபிட்டல்ஸ், சன்ரைசெர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 20 லட்சத்துக்கும் மேலான ஃபாலோவெர்ஸ்களை கொண்டுள்ளது.கடைசி’ இடத்தில்,16 லட்சம் ஃபாலோவெர்ஸ்களுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…