விசில் பறக்கப்போகும் சேப்பாக்கம் மைதானம்..! சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் 2023 தொடரில் சென்னையில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 41-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி, கடைசியாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

மேலும், பஞ்சாப் அணி, இதுவரை நடந்த 8 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் பஞ்சாப் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த இரு அணிகளும் கடைசியாக விளையாடிய போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற போராடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த போட்டியின் டாஸ் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

சென்னை vs பஞ்சாப் : போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்களின் பட்டியல்.

சென்னை சூப்பர் கிங்ஸ் : 

டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (C&W), துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, மஹீஷ் தீக்ஷனா, ஆகாஷ் சிங்

பஞ்சாப் கிங்ஸ் :

ஷிகர் தவான், அதர்வா டைடே, லியாம் லிவிங்ஸ்டோன், சிக்கந்தர் ராசா, ஜிதேஷ் சர்மா (WK), சாம் குர்ரான், ஷாருக் கான், ஹர்பிரீத் ப்ரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சின்

Published by
செந்தில்குமார்

Recent Posts

”என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி இருந்தது” – ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு.!

விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில்…

3 minutes ago

Fact Check: பாடகி ஆஷா போஸ்லே மரணம்.? மகன் கூறிய உண்மை தகவல்.!

டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…

36 minutes ago

இந்த இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

1 hour ago

INDvsENG : மூன்றாவது போட்டியை பார்க்க விராட் கோலி ஏன் வரவில்லை? தினேஷ் கார்த்தி உடைத்த உண்மை!

லண்டன் : உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்  விராட்…

1 hour ago

’75 வயதானால் வழி விடுங்கள்” …யாரை சொல்கிறார் மோகன் பகவத்?

மகாராஷ்டிரா : மாநிலம் நாக்பூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) தலைவர் மோகன் பகவத்,…

2 hours ago

Mrs & Mr திரைப்படத்தில் “பாட்டுக்கு அனுமதியே வாங்கவில்லை”… வழக்கு தொடர்ந்த இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

3 hours ago