10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வி..!

இன்றைய 21 -வது ஓவரில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக ராகுல் திரிபாதி, சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் சுப்மன் கில் 11 ரன்னில் வெளியேறினார். பின்னர், இறங்கிய நிதீஷ் ராணா 9 , சுனில் நரைன் 17 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இதைத்தொடர்ந்து, இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, தொடக்க வீரராக களம் கண்ட ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 81 ரன்கள் குவித்தார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 167 ரன்கள் எடுத்தனர்.
168 ரன்கள் இலக்குடன் சென்னை அணியில் தொடக்க வீரர்களாக டு பிளெசிஸ், ஷேன் வாட்சன் இருவரும் களமிறங்க சிறிது நேரத்தில் டு பிளெசிஸ் 17 ரன்னில் வெளியேற பின்னர், இறங்கிய அம்பதி ராயுடு நிதானமாக விளையாடி 30 ரன்கள் எடுத்தார்.
பின்னர், அதிரடியாக விளையாடிய ஷேன் வாட்சன் 50 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து,இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025