CSK v PBKS Conway [Image Source : Twitter/@IPL]
ஐபிஎல் தொடரில் இன்றைய CSK vs PBKS போட்டியில் சென்னை அணி முதலில் களமிறங்கி அதிரடியாக பேட் செய்து 200/4ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில்விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியில், ருதுராஜ் மற்றும் கான்வே அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு களமிறங்கிய துபே, அதிரடியாக விளையாடி சில சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
இருந்தும் ஷிவம் துபே 28 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் கான்வே நடப்பு ஐபிஎல் தொடரில், தனது 5-வது அரைசதத்தை நிறைவு செய்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். இதையடுத்து களமிறங்கிய மொயின் அலி 10 ரன்கள் மற்றும் ஜடேஜா 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
கடைசியில் களமிறங்கிய தோனி(13*), 20 வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். முடிவில் சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கான்வே 92* ரன்கள் எடுத்தார். இதனால் பஞ்சாப் நை வெற்றி பெற ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…