Rajasthan Royals Innings [Image Source : Twitter/@IPL]
ஐபிஎல் தொடரின் இன்றைய RR vs CSK போட்டியில், முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 202/5 ரன்கள் குவித்துள்ளது.
16-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இதன்படி, ராஜஸ்தான் அணியில் முதலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் விளாசினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 27 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழக்க, இதன்பின் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 17 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய துருவ் ஜூரல் தேவையான பந்துகளில் மட்டும் ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க, தேவ்தட் படிக்கல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் களத்தில் இருந்தனர். இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்களும், துருவ் ஜூரல் 34 ரன்களும், ஜோஸ் பட்லர் 27 ரன்களும், தேவ்தட் படிக்கல் 27* ரன்களும் குவித்துள்ளனர். சென்னை அணியில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…