DCvsSRH ipl [ImageSource : SPORTZPICS]
ஐபிஎல் தொடரில் இன்றைய DC vs SRH போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் டெல்லியின் அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதுகின்றன. ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் SRH அணி 9-வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் DC அணி 10-வது இடத்திலும் இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதியதில் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
SRH அணி: ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(C), ஹென்ரிச் கிளாசென்(W), அபிஷேக் சர்மா, அப்துல் சமத், அகேல் ஹொசைன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்
DC அணி: டேவிட் வார்னர்(C), பிலிப் சால்ட்(W), மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, பிரியம் கார்க், அக்சர் படேல், ரிபால் பட்டேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…