லசித் மலிங்கா டி20 உட்பட அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மலிங்கா ஏற்கனவே 2011 இல் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும், 2019 இல் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்து இருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸால் வெளியிடப்பட்ட பின் அவர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தனது 16 வருட சர்வதேச வாழ்க்கையில், மலிங்கா 340 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 30 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 84 டி 20 போட்டிகள் அடங்கும். இதில், அவர் மொத்தம் 546 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்டில் 101 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 338 மற்றும் டி20 இல் 107 ஆகியவை அடங்கும். லசித் மலிங்கா தனது தனித்துவமான பந்துவீச்சு நடவடிக்கையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை 2 முறை வீழ்த்தியுள்ளார். ஒரு நாள் சர்வதேச போட்டியில் 3 ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்துள்ளார். இதனால், மலிங்கா “டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்” என்று அழைக்கப்பட்டார். இவரது கேப்டன்சியின் கீழ் இலங்கை அணி 2014 ஆண்டு டி 20 உலகக் கோப்பையை வென்றது. மலிங்காவின் தலைமையில் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக டி 20 உலகக் கோப்பையை இலங்கை வென்றது.
இது தவிர ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது மலிங்கா மொத்தம் 170 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுகுறித்து மலிங்கா கூறுகையில், கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். அதே சமயம் விளையாட்டின் உணர்வை மேம்படுத்தும் இளைய தலைமுறையினருக்கு நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன். விளையாட்டை விரும்பும் அனைவருடனும் நான் எப்போதும் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…