#SLvIND: தீபக் சாஹர் காட்டடி.., இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி ..!

Published by
murugan

இந்திய அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 277 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இன்று இரு அணிகளுக்கும் இடையே 2-வது ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெற்றது.

அதன்படி, டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 275 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் சாஹல், புவனேஷ்வர் குமார் தலா 3, தீபக் சாஹர் 2 விக்கெட்டை பறித்தனர். 276 ரன்கள் இலக்குடன் இந்திய அணியில் தொடக்க வீரராக பிருத்வி ஷா , தவான்  இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே பிருத்வி ஷா 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய இஷன் கிஷன் ஒரு ரன் எடுத்து விக்கெட்டை இழக்க அடுத்த சில நிமிடங்களில் தவான் 29 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். மணிஷ் பாண்டே 37 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா வந்த வேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் அரை சதம் விளாசி 53 ரன்கள் எடுத்தார். பின் சிறப்பாக விளையாடிய குருனல் பாண்டியா 35 ரன்னில் வெளியேறினார். இதனால் இந்திய அணி இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் எட்டாவது வரிசையில் இறங்கிய தீபக் சாஹர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் இந்திய அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 277 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தீபக் சஹர் கடைசி வரை களத்தில் 69* ரன்களுடன் இருந்தார். அதில் 7 பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும். 3 ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதால் தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டி வருகின்ற 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

Published by
murugan
Tags: SLvIND

Recent Posts

சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…

49 minutes ago

பாமகவில் ராமதாஸுக்கு பின் அன்புமணி தான் – ஜி.கே.மணி திட்டவட்டம்!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…

2 hours ago

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

6 hours ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

6 hours ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

7 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

7 hours ago