ஓமானை வீழ்த்தி …ஆஸ்திரேலியா அபார வெற்றி ..!!

Published by
அகில் R

டி20I: டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது, இதில் இன்றைய 10-வது போட்டியாக ஆஸ்திரேலியா அணியும், ஓமான் அணியும் பார்படாஸ்ஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஓமான் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததது.

அதன் படி பேட்டிங் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் சிலர் ரன்ஸ் எடுக்காமல் சொதப்பவும் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டோய்னிஸ் அதிரடியால் ஸ்கோரை பலப்படுத்தியது. வார்னர் 51 பந்துக்கு 56 ரன்களும், ஸ்டோய்னிஸ் 36 பந்துக்கு 67 ரன்களும் எடுத்தனர். இதனால் 20 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஓமான் அணி ஆஸ்திரேலியா அணியின் வலுவான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 57-6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இருப்பினும் அயன் கான் மற்றும் மெஹ்ரான் கான் இருவரும் இணைந்து சற்று ஸ்கோரை உயரத்தினார்கள். ஆனாலும், இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது.

இறுதியில், 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அசுற்றலை அணியில் அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 3விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதே போல் ஓமான் அணியில் அயன் கான் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றி பெற்றதோடு, இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

 

Published by
அகில் R

Recent Posts

கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…

6 seconds ago

எல்லை மீறும் பாகிஸ்தான்., 9வது நாளாக தொடரும் காஷ்மீர் எல்லை தாக்குதல்!

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

33 minutes ago

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…

1 hour ago

கோவா கோயில் துயரம்.. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு.!

கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…

2 hours ago

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று பெங்களூருடன் மோதல்.!

பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…

2 hours ago

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

4 hours ago