SarfarazKhan - ManishPandey [File Image]
IPL 2024: 17 ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதால், இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி, துபாயில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக 10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவார்கள்.
இந்த பட்டியலை சமர்பிப்பதற்கு நவம்பர் 26ம் தேதி வரை அவகாசம் உள்ளதாகவும், அதற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஐபிஎல் அமைப்புத் தெரிவித்துள்ளது. ஆனால் மினி ஏலத்திற்கு முன் டிரேடிங் முறை மூலம் வீரர்களை விற்றுக்கொள்ளலாம். இதனால் ஐபிஎல் அணிகள் தங்கள் வீரர்களை விற்றும், வாங்கியும் வருகின்றனர்.
தற்போது ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த தேவ்தத் படிக்கலை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளது. அதேபோல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர வீரரான ஆவேஷ் கானை ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது. இப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் தங்கள் அணியில் இருந்து சில வீரர்களை விடுவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் சர்பராஸ் கான் மற்றும் மணீஷ் பாண்டேவை விடுவிக்க தயாராக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சீசனில், அவர் நான்கு ஆட்டங்களில் 13.25 சராசரியுடன் 53 ரன்கள் மட்டுமே எடுத்தார். மனிஷ் பாண்டே 10 ஆட்டங்களில் 17.78 சராசரியில் 160 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல்லில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற மனிஷ் பாண்டே, தனது ஐபிஎல் வாழ்க்கையில் 170 போட்டிகளில் விளையாடி 3,808 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மனிஷ் பாண்டேவை வர்த்தகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…