‘இந்தியாவுக்கு கிடைத்த பெஸ்ட் கேப்டன் தோனி தான்’ !! தோனியை புகழ்ந்து தள்ளிய கவுதம் கம்பிர் ..!

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : இந்தியாவின் முன்னாள் கேப்டன் ஆன எம.எஸ்.தோனியை முன்னாள் கிரிக்கெட்டரான கவுதம் கம்பிர் புகழ்ந்து பேசி உள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் தற்போது கொல்கத்தா அணிக்கு வழிகாட்டியாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வருகிறார். இதனால் இந்த தொடரில் கொல்கத்தா அணி இது வரை 3-ல் 3 வெற்றிகளை பெற்று நன்றாக விளையாடி கொண்டு வருகிறது. மேலும், இன்றைய ஐபிஎல் போட்டியாக சென்னை அணியுடன் சேப்பாக்கில் மோதவுள்ளது. இந்நிலையில் கவுதம் கம்பிர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு அளித்த ஒரு நேர்காணலில் தோனியை புகழ்ந்து பேசி இருந்தார்.

அவர் பேசுகையில், “இன்றைய போட்டியில் கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்றே நான் நினைப்பேன். சென்னை அணியிலும் எனது நணபர்கள் இருக்கிறார்கள் ஆனால் போட்டி என்று வந்துவிட்டால் அதில் நான் வெற்றி பெற்று திரும்ப வேண்டும் என்று நினைப்பேன். நீங்கள் இதை தோனியிடம் கேட்டாலும் அவரும் அதை தான் சொல்லுவார். தோனி பற்றி கூற வேண்டும் என்றால் அவர் ஒரு அற்புதமான கேப்டன் அவரை போல கேப்டன் இந்திய அணிக்கு இனிமேல் கிடைக்க மாட்டார்கள் என்றே கூறுவேன்.

தோனி போல ஒரு கேப்டனால் 3 ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாது, ஒரு கேப்டனாக நீங்கள் உள்ளுரில் நடக்கும் கோப்பைகள் வாங்கலாம். ஒரு கேப்டனாக நீங்கள் ஐபிஎல் கோப்பைகளை வாங்கலாம் ஆனால் தொடர்ந்து 3 ஐசிசி கோப்பைகளை வாங்க வேண்டும் என்றால் அது தோனியால் தான் சாத்தியம்.

மேலும், ஐபிஎல் தொடரிலும் அவரை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, மேலும் போட்டியில் இவர்  தந்திரங்கள் எல்லாமே சிறப்பாக அமையும். இவருக்கு நிகரான கேப்டன் இவர் மட்டுமாக தான் இருப்பார். மேலும், ஒரு ஓவருக்கு 20 ரன்கள் என்றாலும் சரி, டெத் ஓவர்களில் அடிக்க கூடிய ஸ்கோர் இருந்தாலும் சரி இவர் களத்தில் இருந்தால் கண்டிப்பாக அந்த போட்டியை முடித்து வைப்பார்”, என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ஒரு நேர்காணலில் இவர் கூறி இருந்தார்.

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

4 minutes ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

44 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago