MSD, Stephen Fleming [file image]
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் செயலாற்ற வைக்க தோனி பிசிசிஐ உதவுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பெற தொடங்கியதிலிருந்து பல ஜாம்பவங்களின் பெயர்கள் இதற்க்கு அடிப்பட தொடங்கியது. அதில் முக்கியமாக இந்திய முன்னாள் கிரிக்கெட்டரான கவுதம் கம்பிர், இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேலா ஜெயவர்தனே, நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீபன் பிளெமிங் ஆகியோர்களின் பெயர்கள் அடிப்பட்டது.
அதிலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு நீண்ட காலமாக தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ஸ்டீபன் பிளெமிங்கை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற வைக்க பிசிசிஐயே நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தியதாக சில தகவல்கள் உலாவியது. மேலும், அவர் அந்த பேச்சு வார்த்தைக்கு தயாராகவில்லை எனவும் அவருக்கு அதில் விருப்பம் இருப்பதாக தெரியவில்லை எனவும் தகவல்கள் வெளியானது.
தற்போது, பிளெமிங்கை இதற்கு சம்மதிக்க வைக்க பிசிசிஐ தோனியிடம் உதவி கேட்க போவதாக ஒரு தகவல்கள் பிசிசிஐ வட்டாரத்தில் வெளியாகி வருகிறது. இதை குறித்து பிசிசிஐ வட்டாரங்களின் மூலம் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு கிடைத்த தகவலின் படி, “பிளெமிங் இந்த பதவிக்கு இல்லை என கூறவில்லை எனவும் அவர் ஒப்பந்த காலத்தை குறித்து மட்டுமே கவலையை தெரிவித்துள்ளார் எனவும் கூறுகின்றனர். மேலும், தற்போது பயிற்சியாளராக இருக்கும் ராகுல் ட்ராவிட்டும் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டவில்லை.
அவரும் ஆரம்பத்தில் வற்புறுத்தப்பட்டார். அதே போல ப்ளெமிங்கையும் வற்புறுத்தினால் அவரும் ஒத்துக்கொள்வார். அந்த வேலையைச் செய்ய எம்.எஸ்.தோனியை விட சிறந்தவர் யாரும் இல்லை. இதனால் தோனியிடம் உதவியை நாட பிசிசிஐ ஒரு திட்டம் தீட்டுகிறது என பபிசிசிஐ வட்டாரங்களில் பேச்சுகள் நிலவுகிறது. எது நடந்தாலும் தலைமை பயிற்சியாளரை பற்றி அதிகாரப்பூர்வ தகவல் பிசிசிஐயிடமிருந்து வெளியாகும் வரை காத்திருந்தே ஆக வேண்டும்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…