Gurbaz MSD [Image-Twitter/@RGurbaz_21]
ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் தனக்கு பரிசளித்த தோனிக்கு நன்றி கூறி அதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படும் கொண்டாடப்படும் ஒரு கிரிக்கெட்டராக திகழ்ந்து வருகிறார். அனைத்து நாடுகளிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் உட்பட ரசிகர்களும் கூட தோனிக்கு ரசிகர்கள் என்றால் அது மிகையாகாது.
அந்த அளவிற்கு தோனி தனது ஆட்டத்தின் மூலம் வெவ்வேறு நாடுகளின் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரும், ஐபிஎல் இல் கொல்கத்தா அணிக்காக விளையாடிய வீரருமான ரஹ்மனுல்லா குர்பாஸ்-க்கு தோனி தனது சிஎஸ்கே அணி நம்பர்-7 ஜெர்ஸியை பரிசாக அனுப்பியுள்ளார்.</
p>
குர்பாஸ் எப்போதும் தான் ஒரு எம்.எஸ்.தோனியின் தீவிர ரசிகர் என கூறி வருபவர், ஐபிஎல் தொடரில் கூட தோனியுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருபவர்.
அப்படிப்பட்ட குருவாக பார்க்கக்கூடிய தோனி தனக்கு பரிசு அனுப்பிய அவரின் இந்த செயலுக்கு நன்றி கூறும் விதமாக குர்பாஸ் தனது ட்விட்டரில், தோனிக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து பரிசை அனுப்பியதற்கு, நன்றி எம்.எஸ்.தோனி என்று குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்தா அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 227 ரன்கள் குவித்திருந்தார். குர்பாஸ் பகிர்ந்த இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…