டிஎன்பிஎல் டி20 போட்டியின் 11 வது ஆட்டத்தில் ரூபி திருச்சி அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியானது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று இரவு நடைபெற்ற 11 வது ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில்,டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச தீர்மானித்தது.
இதனால்,முதலில் பேட்டிங் செய்த திருச்சி வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது.குறிப்பாக,நிதிஷ் ராஜகோபால் 45 ரன்களும்,முகமது கான் 26 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து,146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது.குறிப்பாக,தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய ஹரி நிஷாந்த் 26 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இதனையடுத்து,மோகித் ஹரிஹரன் நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில்,திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றியைக் கைப்பற்றியது.இதில்,மோகித் ஹரிஹரன் 41 ரன்களும், சுவாமிநாதன் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
மேலும், மோகித் ஹரிஹரன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி:
எஸ்.அருண், ஹரி நிஷாந்த் (C), மணி பாரதி (wk), ஆர்.வேக், சுரேஷ் லோகேஸ்வர், ஆர்.எஸ்.மோகித் ஹரிஹரன், எஸ் சுவாமிநாதன், லட்சுமிநாராயணன் விக்னேஷ், ரங்கராஜ் சுதேஷ், குர்ஜபனீத் சிங், எம் சிலம்பரசன்.
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி:
அமித் சாத்விக், சுமந்த் ஜெயின், நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ் (wk), முகமது அட்னான் கான், அந்தோணி தாஸ், எம் மதிவண்ணன், சரவன் குமார், ரஹில் ஷா (C), எம் பொயமோஜி, சுனில் சாம்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…