Jithesh Sharma Wicket [file image]
IPL 2024 : ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியாக பஞ்சாப் அணிக்கும், பெங்களூரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஸ்பைடர் கேமரா சர்ச்சை என்பது வந்துவிடும். அதே போல இந்த போட்டியிலும், ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
நடைபெற்று வந்த நடப்பு ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. பஞ்சாபி அணியின் பேட்டிங் சற்று மோசமாக இருந்த சமயத்தில் சாம் கர்ரன்னும், ஜிதேஷ் ஷர்மாவும் தாக்குப்பிடித்து விளையாடினர்.
அவர்களது சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாபி அணியின் ஸ்கோரும் உயர்ந்து கொண்டே இருந்தது. அப்போது, நன்றாக விளையாடி கொண்டிருந்த ஜிதேஷ் சர்மா ஆட்டத்தின் 18.4 ஓவரில் சிராஜ் வீசிய பந்தை மேலே தூக்கி அடித்தார். அப்போது பந்தை பெங்களூரு அணியின் ஃபீல்டராக நின்ற அனுஜ் ராவத் அந்த பந்தை கனகச்சிதமாக பிடித்தார், களநடுவரும் அதனை விக்கெட் என் அறிவித்தனர்.ஆனால், பிரச்சனை என்னவென்றால் அதன் பிறகு நடுவர்கள் சில நிமிடங்கள் அவரை காத்திருக்க சொன்னார்கள்.
ஏனென்றால் அவர் அடித்த பந்தானது மைதானத்தின் மேல உள்ள இங்கும் அங்கும் சுற்றி திரியும் ஸ்பைடர் கேமராவின் வயர் (WIRE) மீது பட்டது போல இருக்கிறது என்று அதனை மூன்றாம் நடுவர்கள் பரிசீலனை செய்தனர். ஒரு வேளை அந்த பந்து ஸ்பைடர் கேமராவின் வயரை தொட்டிருந்தால் அந்த பந்தை நடுவர்கள் ‘டெட் பால்’ என்று அறிவித்து விடுவார்கள். அதனால் அவர் சில நிமிடம் களத்தில் காத்திருந்தார்.
ஆனால், சில நிமிடங்கள் கழித்து அவர் அடித்த அந்த பந்து ஸ்பைடர் கேமராவின் வயரை தொட்டதற்கான எந்த ஒரு ஆதார வீடியோ இல்லாத காரணத்தால் இறுதியாக களநடுவர்களின் ‘விக்கெட்’ என்ற முடிவையே மூன்றாம் நடுவர்களும் அறிவித்தனர். ஆனால், தொலைவிலிருந்து பார்த்தால் படாதது போல் இருந்தாலும் அதற்கான போதிய ஆதர வீடியோ இல்லாத காரணத்தால் இப்படி முடிவெடுப்பது தவறான காரியம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சர்ச்சையாக சமூக தளத்தில் பேசி வருகிறார்கள்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…