இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஜோ ரூட் தலைமையிலான வீரர்களின் பட்டியலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டிகள் அனைத்தும் சென்னை, அஹமதாபாத் மற்றும் புனே ஆகிய மூன்று மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள், சென்னையில் நடைபெறும் நிலையில், மீதமுள்ள இரண்டு போட்டிகுளும் அஹமதாபாதில் நடைபெறவுள்ளது. அடுத்த நடைபெறும் டி-20 தொடர் அனைத்தும் அஹமதாபாத்தில் நடைபெறும் எனவும், மூன்று ஒருநாள் போட்டிகள் புனேவில் நடைபெறுகிறது. அதற்கான அட்டவணையை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
அதன்படி, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், இன்று 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஜோ ரூட் தலைமை தாங்குகிறார்.
இங்கிலாந்து அணி:
ஜோ ரூட் (கேப்டன்), ஜாஃப்ரா ஆர்சர், மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பேர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, பென் போக்ஸ், டான் லாரன்ஸ், ஜேக் லீச், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனைதொடர்ந்து, ரிசர்வ் வீரர்களாக ஜேம்ஸ் பிரேசி, மேசன் கிரேன், சகிப் மெஹ்மூத், மேத்யூ பார்கின்சன், ஒல்லி ராபின்சன், அமர் விர்தி ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…