இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு, கட்டணம் உயர்ந்ததால் ரசிகர்கள் எடுத்த புதிய யுக்தி.!

உலககோப்பையில் இந்தியா-பாக் போட்டி நடைபெறும் அகமதாபாத்தில், மருத்துவமனையின் கட்டணமும் உயர்ந்துள்ளதாக தகவல்.
இந்தியாவில் இந்த வருடம் அக்டோபர் 5இல் தொடங்கவுள்ள உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, இப்போதே அதற்கான வரவேற்பு பெருமளவில் அதிகரித்துள்ளது என்று கூறலாம். அதிலும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு கட்டணங்களும் தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத் ஸ்டேடியத்தில் இந்தியா-பாக். போட்டி நடைபெறவுள்ள நிலையில், ஓட்டல் விடுதியில் ஒரு இரவு அங்கு தங்குவதற்கான கட்டணம் ரூ.50,000 வரை உயர்ந்துள்ளதால், வருத்தமடைந்த ரசிகர்கள் இதற்கு ஒரு தீர்வாக புதிய யுக்தியை கையாண்டுள்ளனர், அதாவது மருத்துவமனையில் தங்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.
ஆனால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையிலும் போட்டியன்று இரவு தங்க, ஒரு இரவுக்கு ரூ.3000 முதல் ரூ.25,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் அவர்களின் முழு உடல் பரிசோதனை மற்றும் உணவு உள்ளிட்ட வசதிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025