ராமரை தொடர்ந்து கல்கி அவதாரம் எடுத்த பிரபாஸ்! ‘கல்கி 2898 – AD’ பட கிளிம்ப்ஸ் வீடியோ!

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்துக்கு இப்போது “‘கல்கி 2898-AD” என்று பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் டியாகோவில் நேற்று நடைபெற்ற காமிக்-கான் விழாவில், இப்படத்தின் தலைப்பு மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.
இந்த வீடியோ வைத்து பார்க்கும்பொழுது, ஒரு ஹாலிவுட் ரேஞ்சில் கதைக்களம் அமைந்திருப்பது போல் தெரிகிறது. நடிகர் பிரபாஸ் இதற்கு முன்னதாக ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்திருந்தார். இப்பொது, கல்கி 2898-AD படத்தின் மூலம் கல்கியாக அவதாரம் எடுத்துக்கிறார்.

மேலும் அந்த வீடியோவில், ஒவ்வொருத்தரும் ஒரு விதமான கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளனர். குறிப்பாக, தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கிய பசுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால், இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் கமலின் கதாபாத்திரம் இடம்பெறவில்லை. அவர் இந்த படத்தில் முக்கிய வில்லானக நடித்துள்ளதால், அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இப்படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டிகிளிம்ப்ஸ் வீடியோல் தயாரிக்கப்பட்டு, இதுவரை இல்லாத இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ளது. ‘கல்கி 2898 கிபி’ அடுத்த ஆண்டு ஜனவரி 12 அன்று உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகுகிறது. தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
