என்னா அடி! கடவுளுக்கு நன்றி ஹைதராபாத் கூட விளையாடல…மிரண்ட வாசிம் அக்ரம் !

Published by
பால முருகன்

Sunrisers Hyderabad : ஹைதராபாத் அணி பேட்டிங் பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் பேசியுள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  அதிரடியான பார்மில் விளையாடி வருகிறது. இதுவரை 7 போட்டிகள் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. பேட்டிங்கை பொறுத்தவரையில் ஹைதராபாத் அணி இந்த சீசனில் பெரிய அளவில் சாதனைகளை படைத்தது கொண்டு வருகிறது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கடைசியாக பெங்களூர் அணிக்கு எதிராக நடைப்பெற்ற போட்டியில் கூட முதலில் பேட்டிங் செய்த போது 287 ரன்கள் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்தது இருந்தது. எனவே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  பார்ம் பற்றி ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் சமீபத்திய பேட்டி ஒன்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பார்ம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங்கை இந்த சீசனில் பார்க்கும் போது ரொம்பவே பயமாக இருக்கிறது. நான் இந்த நேரத்தில் கடவுளுக்கு தான் நன்றி சொல்வேன்.

என்ன காரணத்துக்காக நன்றி சொல்வேன் எதற்காக என்றால் இந்த காலத்தில் என்னை கிரிக்கெட் விளையாடாமல் ஆக்கியதற்கு தான். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 270, 280 ரன்கள் அசால்டாக அடிக்கிறார்கள். ஒரு போட்டியில் இப்படியான ரன்கள் அடித்தால் பரவாயில்லை ஆனால், அவர்கள் பல போட்டிகளில் இப்படி அடிக்கிறார்கள்.

5 ஓவரில் 100 ரன்கள் அடிக்கிறார்கள். இப்படியெல்லாம் ரன்கள் அடிப்பது சட்டவிரோதம். இது எப்படி நடக்கும்? பந்துகளை ஃபுல்-டாஸ் வீசினாலும் கூட இப்படி ரன்களை குவிக்க செய்வது ரொம்பவே கடினமான விஷயம்.ஹென்ரிச் கிளாசென் போன்ற வீரர்கள் எல்லாம் அந்த அணியில் இருப்பதால் அணி நல்ல வலிமையாக மாறியுள்ளது. வரும் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் எனவும் நான் நம்புகிறேன் என்றும்” வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். மேலும், நாளை ஹைதராபாத் அணி பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…

23 minutes ago

சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…

1 hour ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!

சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…

1 hour ago

காருக்குள் கருகிய நிலையில் சடலம்.., தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…

2 hours ago

தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை! இன்றும், நாளையும் மிக கனமழை – வானிலை மையம்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…

2 hours ago

சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…

4 hours ago