அவர்களை கையாள கம்பிருக்கு தெரியும்! சௌரவ் கங்குலி பேட்டி!

Published by
அகில் R

சௌரவ் கங்குலி : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தீவிர தேடுதலில் பிசிசிஐ இருந்து வரும் நிலையில் பல கிரிக்கெட் ஜாம்பான்களின் பெயர்கள் அடிபட்டு கொண்டே இருந்தது.

அதில் குறிப்பாக கவுதம் கம்பிர் பெயர் என்பது தீவீரமாக அடிபட்டு கொண்டே வருகிறது. மேலும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக செயல்ப்பட்டு இந்த ஆண்டின் ஐபிஎல் கோப்பையும் கைப்பற்றி இருந்தார் கவுதம் கம்பிர்.

இதனாலே அவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் ட்ராவிடுக்கு அடுத்த படியாக நியமிக்க வேண்டும் என்று பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்தியதாகவும்.

இறுதியில் அவரை தான் நியமிக்க போவதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் இப்படி பல தகவல்கள் பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி கம்பிரை குறித்து ரெவ் ஸ்போர்ட்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருந்தார். அவர் பேசுகையில்,”கம்பிர் இந்த பதவியில் ஆர்வம் அதிகம் உள்ளவர், மேலும் மிகவும்  நேர்மையானவர்.

ஒரு ஐபிஎல் அணிக்கு ஆலோசகராக இருப்பதற்கும், ஒரு சர்வதேச அணிக்குப் பயிற்சியளிப்பதற்கும் உண்மையில் நிறைய வித்தியாசம் உள்ளது. அதுவும் இந்தியா போன்ற உயர்தர அணிக்கு பயிற்சியளிப்பது மிகவும் மாறுபட்ட ஒன்றாகும். அதை கௌதம் நன்கு அறிந்திருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மேலும், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற நட்சத்திரங்களை எவ்வாறு கையாளுவது என்பது அவருக்கு நன்றாக தெரியும், மேலும், இந்திய அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப கம்பிர் தன்னை மாற்றிக் கொள்வார்”, என்று கங்குலி கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

ரிதன்யா தற்கொலை : ஜாமின் மனு மீதான விசாரணை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ரிதன்யா தற்கொலை : ஜாமின் மனு மீதான விசாரணை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பூர் :  மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…

29 minutes ago

அகமதாபாத் விமான விபத்து : ‘இழப்பீடு இல்லை’ என மிரட்டுவதாக எழுந்த புகார்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…

59 minutes ago

பாமக சட்டமன்றக்குழு கொறடா அருளை நீக்குங்க… மனு அளித்த பாமக எம்எல்ஏக்கள்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…

2 hours ago

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி… பாக். அணிக்கு அனுமதி!

டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…

2 hours ago

இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…

4 hours ago

முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா! ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

சென்னை :  நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…

4 hours ago