GT vs MI Qualifier 2 [Image Source : SPORTZPICS]
ஐபிஎல் தொடரின் 2-வது தகுதிச்சுற்று GT vs MI போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 2வது தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
நடப்பு ஐபிஎல்லில் மும்பையுடன் மோதிய இரண்டு போட்டிகளில் குஜராத் அணி ஓரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி இறுதி போட்டிக்கு செல்வதற்கான முக்கியப்போட்டி என்பதால், இரு அணி வீரர்களும் முழு உத்வேகத்துடன் களமிறங்குகின்றனர்.
இதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மோதவுள்ளது. குஜராத் அணி கடைசியாக சென்னை அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. மும்பை அணி கடைசியாக லக்னோ அணியுடன் மோதிய போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
தற்பொழுது, அகமதாபாத்தில் பெய்த மழையின் காரணமாக போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்):
விருத்திமான் சாஹா (W), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (C), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்):
இஷான் கிஷன்(W), ரோஹித் சர்மா(C), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…