GTvsSRH: சதம் அடித்து மிரட்டிய சுப்மன் கில்..! ஹைதராபாத் அணிக்கு வலுவான இலக்கு..!

ஐபிஎல் தொடரில் இன்றைய GT vs SRH போட்டியில், முதலில் பேட் செய்த குஜராத் அணி 188/9 ரன்கள் குவித்துள்ளது.
16-வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது.
இதன்படி, குஜராத் அணியில் முதலில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விருத்திமான் சாஹா ரன்கள் ஏதும் எடுக்காமல் களத்தை விட்டு வெளியேறினார். அவருடன் இணைந்து களமிறங்கிய சுப்மன் கில் அதிரடியாக விளையாடினார். அவரையடுத்து, சாய் சுதர்சன் களமிறங்கி கில்லுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
ஒருபுறம் சுப்மன் கில் அதிரடியால் பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார். மறுபுறம் அவருக்கு இணையாக விளையாடிய சுதர்சன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்து தங்களது விக்கெட்டை இழந்தனர். ஆனால் சுப்மன் கில் 56 பந்துகளில் 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என சதமடித்து அசத்தினார்.
முடிவில், குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 101 ரன்களும், சாய் சுதர்சன் 47 ரன்களும் குவித்துள்ளனர். ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் தனது சிறப்பான பந்துவீச்சால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025