#IPL BREAKING: அனல் பறந்த குஜராத் பந்துகள்..! 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

ஐபிஎல் தொடரில் இன்றைய GT vs SRH போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
16-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது.
இதன்படி, குஜராத் அணியில் முதலில் களமிறங்கிய சுப்மன் கில் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட்டு சதமடித்தார். அவருடன் இணைந்து சாய் சுதர்சன் 47 ரன்கள் குவித்தார். முடிவில், குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து வந்தனர். குஜராத் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க இயலாததால் ஹைதராபாத் அணி வீரர்கள் சொற்ப ரங்களிலே ஆட்டமிழந்தனர்.
ஆனால், ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி சிக்ஸர்கள், பவுண்டரிகள் என பறக்கவிட்டு அரைசதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து புவனேஷ்வர் குமார் பொறுப்பாக விளையாடினார். முடிவில், ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 64 ரன்களும், புவனேஷ்வர் குமார் 27 ரன்களும் குவித்துள்ளனர். குஜராத் அணியில் முகமது ஷமி, மோஹித் ஷர்மா தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.