LSGvsGT Result [file image]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்று இரவு போட்டியில் குஜராத் அணியை, லக்னோ அணி வீழ்த்தியது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் 21-வது போட்டியாக இன்று லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் லக்னோ அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
இதனால் பேட்டிங் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரரான டிகாக் 6 ரன்களில் ஆட்டம் இழந்து 7ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு அவரைத் தொடர்ந்து தேவதூத் படிக்கல்லும் 7 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பிறகு கே.எல்.ராகுலும், ஸ்டோய்னிஸ்ஸும் பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
குறிப்பாக ஸ்டோனிசின் அட்டகாசமான ஆட்டம் அந்த அணியின் ஸ்கோரை உயர்த்துவதற்கு பக்கபலகமாக அமைந்தது. பொறுமையுடன் விளையாடிய கே.எல்.ராகுல் 33 ரன்களுக்கும், அதிரடி காட்டிக் கொண்டிருந்த ஸ்டோய்னிஸ் 58 ரன்களுக்கும் ஆட்டமிருந்து வெளியேறினர். இறுதியாக, லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. இதனால் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது குஜராத் அணி.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கில்லும், சாய் சுதர்சனம் பொறுமையாகவும் அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்திக் கொண்டிருந்தனர். எதிர்பாராத நேரத்தில் குஜராத் அணியின் கேப்டனான கில் 19 ரன்களுக்கு எஸ்.தாகூர் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து இம்பாக்ட் வீரராக களமிறங்கிய வில்லியம்சன் ஒரு ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அதனை தொடர்ந்து குஜராத் அணியின் நம்பிக்கையான சாய் சுதர்சனும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். லக்னோ அணியின் சுழற்பந்து வீச்சர்களின் தாக்குதலில் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டையும் இழந்து தடுமாறியது குஜராத் அணி. இதனால் ஒரு கட்டத்தில் 80 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறி வந்தது.
குஜராத் அணியில் அடுத்ததாக களமிறங்கிய விஜய் ஷங்கரும் 17 ரன்களுக்கும், ரஷீத் கான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள். இதனால், லக்னோ அணியின் வெற்றி ரஷீத் கான் விக்கெட்டிலேயே உறுதி ஆனது. லக்னோ அணியில் சிறப்பாக பந்து வீசிய யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டும், க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார். ரவி பிஷனாய் 2 ஓவர் பந்து வீசி 8 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்து அசத்திருந்தார்.
ஒரு பக்கம் தனியாக நின்று ராகுல் தெவாடியா மட்டும் குஜராத் அணிக்காக போராடி கொண்டிருந்தார். ஆனாலும், இலக்கை எட்ட முடியாமல் குஜராத் அணி தோல்வியை தழுவியது. இறுதியில், குஜராத் அணி 18 ஓவருக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 31 ரன்கள் எடுத்திருந்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…