‘ஹாப்பி பர்த்டே ரோஹித்’ ..! ரோஹித் ஷர்மாவின் சாதனைகள் இதோ !!

Published by
அகில் R

Rohit Sharma : இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவின் பிறந்தநாளான இன்று அவரது சாதனைகளை பற்றி பார்ப்போம்.

கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அறிமுகமானது, அதே தொடரில் ரோஹித் சர்மா தனது சர்வேதச கிரிக்கெட் போட்டியில் கால் பதித்தார். அந்த தொடரில், பாகிஸ்தான் அணியுடனான இறுதி போட்டியில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழந்து வெளியேற கவுதம் கம்பிருடன் இணைந்து வெறும் 10 பந்துகளில் 30 ரன்கள் அடிப்பார். அதற்கு முன் தென் ஆப்ரிக்கா அணியுடனான போட்டியில் அரை சதம் விளாச என அவரது கேரியர் தொடங்கியது.

ஆரம்ப கட்டங்களில் ஒரு ஆல்-ரவுண்டராக களமிறங்கிய ரோஹித் சர்மா, அப்போதைய இந்திய அணியின் கேப்டனான தோனியின் உதவியால் ஒரு தொடக்க வீரராக களமிறங்கினார். இதனால் 2013-ம் ஆண்டு நடைபெற்ற மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பையில் தொடக்க வீரராக களமிறங்கி தான் யார் என்று இந்த உலகத்திற்கு நிரூபித்தார். அந்த தொடரை தொடர்ந்து 2019 நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் 648 ரன்கள் எடுத்ததுடன் அந்த தொடரில் 5 சதங்களை அடித்துள்ளார்.

ஒரு பேட்ஸ்மானாக உலகக்கோப்பையில் 5 முறை சதம் அடித்த முதல் வீரர் ரோஹித் சர்மா தான். மேலும், 50 ஓவர் உலகக்கோப்பையில் மட்டும் இவர் 7 முறை சதங்கள் விளாசி உள்ளார். அதை தொடர்ந்து டி20 போட்டிகளில் 5 முறை சதங்கள் விளாசி உள்ளார். அதிலும் குறிப்பாக ஒரு பேட்ஸ்மானாக 3 முறை இரட்டை சதங்கள் அடித்த முதல் வீரரும் இவரே ஆவார். இப்படி பல சாதனைகளை அவர் ஒரு பேட்ஸ்மேனாக படைத்திருக்கையில் ஒரு கேப்டனாக அவர் செய்த சாதனை ஒரு பிடி மேல் என்றே சொல்லலாம்.

ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக 2018 ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையை வென்றுள்ளார். மேலும், அதே ஆண்டில் நடைபெற்ற நிடஹாஸ் கோப்பையையும் வென்றார். அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆண்டில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு 5 முறை கோப்பையை வென்றுள்ளார். மேலும் இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்றுள்ளார்.

ரோஹித் சர்மா, மொத்தமாக 472 சர்வேதச போட்டிகளில் விளையாடி 18,820 ரன்களை எடுத்துள்ளார். அதில் மொத்தமாக 48 சர்வேதச சதங்களும் அடங்கும். தற்போது, இன்றைய நாளில் X தளத்தில், இந்த ஆண்டில் நடைபெற உள்ள டி20 கோப்பையை வெல்வதற்கும், அவரது பிறந்த நாளுக்கும் சேர்த்து அவரது ரசிகர்கள் Happy Birthday Rohit எனும் ஹாஸ்டாகை பகிர்ந்து ரோஹித் ஷர்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

7 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

9 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

12 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

13 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

15 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

16 hours ago