முதலிடம் பிடித்தார் ஹர்திக் பாண்டியா …! ஹசரங்காவை பின்னுக்கு தள்ளி அசத்தல்

Published by
அகில் R

ஹர்திக் பாண்டியா : நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி கோப்பையை வென்று ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அந்த வெற்றியின் கொண்டாட்டம் தற்போது வரை இந்திய அணி வீரர்கள் கொண்டாடி வருகின்றனர்.  இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு இந்திய அணியில் விளையாடிய அனைத்து வீரர்களும் அவர்களது முழு பங்களிப்பை கொடுத்தார்கள்.

அதிலும் குறிப்பிட்டுச் சொன்னால் ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிலும் இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா ஒரு ஆல் ரவுண்டராக 11 விக்கெட்டுகளும், 144 ரன்களும் குவித்து அசத்தி இருக்கிறார். இந்த தொடரில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போதெல்லாம் தனது திறமையை சரியாக பயன்படுத்தி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்திருக்கிறார்.

மேலும், இந்திய அணி துணை கேப்டன் ஆகும் ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் செயலாற்றினார். தற்போது, இந்த தொடர் முடிவடைந்த பிறகு நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வேதச டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தனர். அதன்பின் ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணியின் டி20 கேப்டனாக செயலாற்றுவார் என்று பிசிசி கூறியிருந்தது ஏற்கனவே இந்த தொடரில் அவர் துணை கேப்டனாக செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா  ஐசிசி சிறந்த ஆல் ரவுண்டர் பட்டியலில் தற்போது முதலிடத்தில் முன்னேறி உள்ளார். அதாவது சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த ஆல் ரவுண்டர் பட்டியலில் 222 புள்ளிகளுடன் முதலிடத்தில் முன்னேறி உள்ளார். இவரை தொடர்ந்து 2-வது இடத்தில் இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளரான ஹசரங்கா 222 புள்ளிகளுடன் இடம் பெற்றுள்ளார்.

டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசை :

  • ஹர்திக் பாண்டியா – இந்தியா – 222 புள்ளிகள்
  • வனிந்து ஹசரங்கா – இலங்கை  – 222 புள்ளிகள்
  • மார்கஸ் ஸ்டோய்னிஸ் – ஆஸ்திரேலியா – 211 புள்ளிகள்
  • சிக்கந்தர் ராசா – ஜிம்பாப்வே – 210 புள்ளிகள்
  • சாகிப் அல் ஹசன் – வங்கதேசம் – 206 புள்ளிகள்
Published by
அகில் R

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

15 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

17 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

21 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

21 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

23 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

24 hours ago