நியூசிலாந்து உடனான போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் – பிசிசிஐ

Published by
பாலா கலியமூர்த்தி

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் நேற்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று 17ஆவது லீக் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் விளையாடியது.  இதில், வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 256 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 41.3 ஓவரில் 261 ரன்கள் எடுத்து  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டில் வங்கதேச அணி பேட்டிங் செய்யும்போது இப்போட்டியின் 9வது ஓவரை இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா வீசி வந்தார். அப்போது ஹர்திக் பாண்டியா ஓவரில் பவுண்டரிகள் சென்றது.

முதல் மூன்று பந்துகளை வீசிய நிலையில், ஹர்திக் பாண்டியா திடீரென்று கீழே விழுந்து வலியால் துடித்தார். அங்கிருந்து மருத்துவக்குழுவினர் களத்திற்கு வந்து ஹார்திக் பாண்டியாவை பரிசோதித்தனர். அதன்பிறகு ஹார்திக் பாண்டியா பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வலி தாங்க முடியாததால் பெவிலியன் சென்றார். ஹார்திக் பாண்டியா ஓவரில் மீதமுள்ள பந்துகளை விராட் கோலி வீசி முடித்தார்.

இதையடுத்து, ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்து தற்போது சோதிக்கப்பட்டு ஸ்கேன் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்திருந்தது. இப்போட்டியின் மூலம் இந்தியா உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் நான்காவது வெற்றியை பதிவு செய்தது. நாளை மறுநாள் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியதில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் தொடர்ந்து பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார். இதனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார். இலங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

5 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

6 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

6 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

7 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

7 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

8 hours ago