தோனி பேட்டிங் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் வரும்போது அவர் மேலும் சிறப்பாக விளையாடுவார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு 14வது சீசன் ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி த்ரில் வெற்றியை பெற்று பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்தப் போட்டியில் 8 பந்துகளில் 17 ரன்களை அடித்தார் கேப்டன் தோனி. அதில் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதனால் தோனியின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், எம்எஸ் தோனி விளையாடுவதை பார்க்க நாடே விரும்புகிறது என்றும் அவரிடம் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது எனவும் கூறியுள்ளார். 4 அல்லது 5வது இடத்திலோ களமிறங்கினால், இன்னும் நிறைய சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசுவார் தோனி என்றார்.
மேலும் தோனி பேட்டிங் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் வரும்போது அவர் மேலும் சிறப்பாக விளையாடுவார். ரெய்னா, ராயுடு, ஜடேஜா ஆகியோர் களமிறங்க தயாராக இருந்தபோது, தோனி முன்னதாக களமிறங்கி சின்ன இன்னிங்ஸ் விளையாடினாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோனியின் ஆட்டம் மிகுந்த நம்பிக்கையை கொடுக்கும்விதமாக இருந்தது என புகழாரம் சூட்டியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…