மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி தொடரில் வங்கதேசம் அணியானது பாகிஸ்தானை ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஹாமில்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி,ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.இதனால்,முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக,ஃபர்கனா 71 ரன்கள் எடுத்தார்.மேலும்,அணியின் கேப்டன் நிகர் சுல்தானா 46 ரன்கள் எடுத்துள்ளார்.பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இதனையடுத்து,235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனைகளாக நஹிதா கான்,சிட்ரா அமீன் களமிறங்கி அதிரடி காட்டினர்.எனினும், நஹிதா 43 ரன்களில் ஆட்டமிழக்க,சிட்ரா 8 பவுண்டரிகள் அடித்து வெளுத்து வாங்கினார்.இதனையடுத்து,104 ரன்களில் அவர் ரன் அவுட் ஆனார்.
இதனையடுத்து,இறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க,இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான்,வங்கதேச அணியிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.வங்கதேச அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஃபஹிமா கதுன் 3 விக்கெட்டுகளும், ருமானா அகமது இரு விக்கெட்டுளையும் எடுத்துள்ளனர்.
பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதன் மூலம் ,உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம்,பாகிஸ்தான் அணி கடந்த 18 உலகக் கோப்பை ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ள நிலையில்,ஆடவர்,மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகளில் 18 தொடர் தோல்விகளை எதிர்கொண்ட ஜிம்பாப்வே அணியுடன் பாகிஸ்தான் இணைந்துள்ளது.ஏனெனில்,1983 முதல் 1992 வரை ஜிம்பாப்வே அணி, உலகக் கோப்பைப் போட்டிகளில் 18 முறை தோல்விகளை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…