முக்கியச் செய்திகள்

ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை படைத்த ஹிட்மேன் ரோஹித்..!

Published by
murugan

ஒருநாள் போட்டிகளில் 300 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றார்.

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்கவீரர்களாக அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர். நிதானமான விளையாடிய  அப்துல்லா ஷபீக் 20 ரன்களில் வெளியேற அவரை தொடர்ந்து  இமாம்-உல்-ஹக் 36 ரன்கள் இருக்கும்போது ஹர்திக் பாண்டியா ஓவரில் கேட்ச் அவுட் ஆனார்.

பின், கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி  சேர்ந்து சிறப்பாக விளையாடினார்கள். பாபர் அசாம் 50 ரன்களும்,  முகமது ரிஸ்வானும் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இருவரும்  போல்ட் ஆனார்கள். பின்னர் களமிங்கிய அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.  இறுதியாக பாகிஸ்தான் 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  191 ரன்கள் எடுத்தது.இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் 191 ரன்கள்  இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய  சுப்மன் கில் 16 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கோலியும் 16 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இப்போட்டியில் ரோஹித் 36 பந்தில் அரைசதம் விளாசினார். இப்போட்டியில் ரோஹித் சர்மா இதுவரை 6 சிக்ஸர் விளாசி உள்ளார். 9-வது ஓவரை ஹரிஸ் ரவூப் வீசினார். அந்த ஓவரில் 2-வது மற்றும் 5 -வது பந்தில் ரோஹித் சர்மா சிக்ஸர் அடித்தார். இதனால் அந்த ஓவரில் 14 ரன்களை இந்தியா சேர்த்தது. இதில் 5-வது பந்தில் தனது 4-வது சிக்ஸர் அடித்தபோது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா புதிய சாதனையை படைத்தார். ஒருநாள் போட்டிகளில் 300 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றார்.

தற்போது களத்தில் ரோஹித் சர்மா  80* ரன்ககளும்,  ஷ்ரேயாஸ் ஐயர் 35* ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

52 minutes ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

5 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

12 hours ago