இன்று நடைபெறவுள்ள 2 வது ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது.
இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 18 போட்டிகளில் நேருக்கு நேராக மோதியதில் 11 முறை ஹைதராபாத் அணியும், 7 முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல் நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 போட்டிகள் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்துடன் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3 இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடம் பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
டெல்லி கேப்பிட்டல்ஸ் :
பிரித்வி ஷா, ஷிகா் தவன், ஸ்டீவன் ஸ்மித், லலித் யாதவ், ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மயா், மாா்கஸ் ஸ்டோனிஸ், அஸ்வின், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டேவிட் வாா்னா் (கேப்டன்), ஜானி போ்ஸ்டோ, கேன் வில்லியம்சன், விராட் சிங், கேதாா் ஜாதவ், விஜய் சங்கா், அபிஷேக் சா்மா, ரஷித் கான், புவனேஸ்வா் குமாா், சித்தாா்த் கௌல், கலீல் அஹமது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…