‘அந்த ஷஷாங் சிங் நான் தான்’ ! பஞ்சாப் அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் அதிரடி வீரர் ..!

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் ஏலத்தில் பஞ்சாப் அணியால் தவறாக எடுக்கப்பட்ட ஷஷாங் சிங் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார்.

ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியாக நடைபெற்ற நேற்றைய போட்டியில் குஜராத் அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் தோல்வியடையும் நிலையில் இருந்த பஞ்சாப் அணி ஷஷாங் சிங் அதிரடியால் த்ரில் வெற்றியை பெற்றது. குஜராத் அணி நிர்ணயித்த 200 என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கியது பஞ்சாப் அணி.

பஞ்சாப் அணியில் அதிரடி தொடக்க வீரர் ஷிகர் தவான் 1 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற பஞ்சாப் அணியின் வெற்றி அப்போதே கேள்வி குறியாக மாறியது. அதன் பின் அபார பந்து வீச்சின் மூலம் குஜராத் அணி, பஞ்சாப் அணியை திணற வைத்தது. நேற்று சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணி 15 ஓவர்கள் வரை ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர்.

மேலும், ஒரு முனையில் ஷஷாங் சிங் மட்டும் தனியாக நின்று போராடி கொண்டிருந்தார். இறுதி வரை அவர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். இதில் ஆச்சர்யம் அடையும் விஷயம் என்னவென்றால் ஐபிஎல் 2024 ஏலத்தின் போது தவறுதலாக பஞ்சாப் அணி ஷஷாங் சிங்கை ரூ.20 லட்சத்திற்கு எடுத்தனர்.

பஞ்சாப் அணி எடுக்க நினைத்தது இளம் வீரரான ஷஷாங் சிங்கை ஆனால், பெயரும், இருவரின் ஆரம்ப தொகையும் ஒன்றாக இருந்ததால் குழப்பத்தில் பஞ்சாப் அணி 31 வயது நிரம்பிய ஷஷாங் சிங்கை எடுத்தனர். இதனால் பஞ்சாப் அணி அப்போதே தவறுதலாக இந்த ஷஷாங் சிங்கை எடுத்து விட்டோம் நாங்கள் இவரை தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்வோம் என்று X தளத்தில் பதிவிட்டிருந்தனர்.

ஆனால், நேற்றைய போட்டியில் கிடைத்த அந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்தி தோல்வியின் விழும்பில் இருந்த பஞ்சாப் அணியை அவரது அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற வைத்து “நீங்கள் எடுத்த ஷஷாங் சிங் சரியானவர் தான் ” என்று உறுதி செய்திருக்கிறார்.  இதன் மூலம் பஞ்சாப் அணியும் இவரை தேர்வு செய்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

6 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

8 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

11 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

12 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

14 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

15 hours ago