Tom Moody about Tilak Varma [file image]
நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய திலக் வர்மா 11 போட்டிகள் விளையாடி 343 ரன்கள் எடுத்திருந்தார். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய காரணத்தால் திலக் வர்மா இந்திய அணியில் சர்வேதச கிரிக்கெட் போட்டியில் விளையாட சேர்க்கப்பட்டார்.
இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் இன்னிங்ஸ்களில் 173 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அடுத்தாக வரவிருக்கும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், திலக் வர்மாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது குறித்து பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், ஆசிய கோப்பை அணியில் திலக் வர்மாவை தேர்வு செய்யும் தேர்வாளர்களின் முடிவு சரியானது. அவரை போல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் எனவும் முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் டாம் மூடி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவருடைய பேட்டிங் அருமை
இது குறித்து பேசிய ஆல்-ரவுண்டர் டாம் மூடி ” ஐபிஎல் போட்டிகள் மற்றும் அவர் சமீபத்தில் இந்திய அணிக்காக விளையாடிய ஆட்டங்ளை நாம் பார்த்தோம். அவருடைய பேட்டிங் மிகவும் அருமையாக இருக்கிறது. அவர் மீது நம்பிக்கை வைத்து இந்திய அணியில் அவரை எடுக்கலாம். கண்டிப்பாக அவர் அணிக்கு தேவையான ரன்களை எடுத்துக்கொடுப்பார். ஐபிஎல் போட்டியில் விளையாடிய அந்த வீரர் சர்வதேச வீரராக மாறியுள்ளார்” என மூடி கூறியுள்ளார்.
நிறைய முக்கியமான விஷயங்கள் கிடைத்துள்ளன
மேலும் தொடர்ந்து பேசிய மூடி ” சர்வதேச கிரிக்கெட்டில் திலக் வர்மா தன்னுடைய திறமையை வெளிக்காட்ட அவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அது மட்டுமின்றி, அவர் முக்கியமான விஷயங்கள் ஏராளமாகப் பெற்றிருப்பதாகத் எனக்கு தெரிகிறது. அவருக்கு கிடைத்த வாய்ப்புகளையும் அவர் சரியாக பயன்படுத்திய காரணத்தால் அணியில் இருக்கிறார் என நான் நினைக்கிறன்” என கூறினார்.
திலக் வர்மா கண்டிப்பா வேணும்
ஒரு பயிற்சியாளரின் கண்ணோட்டத்தில் நான் கவனிக்கும் ஒரு விஷயம் இருக்கிறது அது என்னவென்றால், ஒரு வீரர் கையில் பேட் உடன் எவ்வளவு நேரம் களத்தில் நிற்கிறார் அவர் அப்படி அதிரடியாக விளையாடுகிறார் என்பது தான். எனவே, நான் தேர்வாளராக இருந்தால் கண்டிப்பாக இதை பார்த்து தான் தேர்வு செய்வேன். ஒரு பயிற்சியாளராக நான் சொல்கிறேன் கண்டிப்பாக திலக் வர்மா அணிக்கு வேண்டும்” எனவும் டாம் மூடி கூறியுள்ளார்.
மேலும்,2023-ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…