David Warner's speech following the win against Gujarat [Image Source : BCCI /IPL]
எங்கள் பேட்டிங்கில் என்ன சிக்கல் என தெரியவில்லை என டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் ஓபன் டாக்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய 44-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இப்போட்டியில், முதலில் களமிறங்கிய டெல்லி அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது, கேப்டன் பாண்டிய ஒருபக்கம் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், மறுபக்கம் விக்கெட்டுகள் சரிந்தது.
டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் இறுதியில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் பவுலிங்க் சிறப்பாக இருந்தாலும், பேட்டிங் சிறப்பாக அமையவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து பேசிய டெல்லி கேப்டன் டேவிட் வார்னர், எங்கள் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக விளையாடினார்கள். எங்கள் பேட்டிங்கில் என்ன சிக்கல் என தெரியவில்லை. நாங்கள் பேட்டிங்கை நேர்த்தியாக விளையாட முயற்சித்தோம், ஆனால் முடியவில்லை.
ஷமி பந்து வீசிய விதம் பெருமைக்குரியது. அமானும், ரிபலும் அந்த ஸ்கோரை உயர்த்த விளையாடிய விதம் பாராட்டுக்குரியது. ரன் அவுட் ஆகும்போது நான் அதை எப்போதும் வெறுக்கிறேன். இதனால், எங்கள் பேட்டிங்கில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. குஜராத் அணி வீரர் ராகுல் தெவாடியா அவுட் ஆகும்போது நான் பதட்டமாக இருந்தேன. அந்த மாதிரியான விஷயங்களுக்கு அவர் சிறப்பாக விளையாடுவார் என பெயர் இருக்கிறது.
ஆனால், இஷாந்த் சர்மா அவர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் உறுதியாக இருந்தார் என தெரிவித்தார். மேலும், காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு கலீல் சிறப்பாக செயல்பட்டார், இஷாந்த் எப்போதும் இளமையாகி வருகிறார். அன்ரிச் நோக்கியா எங்களின் மிகவும் நிலையான டெத் பவுலர், ஆனால் அதை சரியாகப் பெற முடியவில்லை. ஆனால் இஷாந்த் எங்களுக்காக எதைச் செயல்படுத்த விரும்புகிறார் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார் எனவும் வார்னர் குறிப்பிட்டார்.
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…