jasprit bumrah [file image]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நீண்ட மாதங்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடுகிறார். கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்காலிகமாக கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்தார்.
இந்நிலையில், தற்போது நீண்ட மாதங்களுக்கு பிறகு ஓய்வு பெற்று பயிற்சியகளை மேற்கொண்டு தயாராகியுள்ள பும்ரா இன்று மீண்டும் விளையாடவுள்ளார். அதன்படி, இன்று அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கேப்டனாக செயல்படுகிறார் நீண்ட மாதங்களுக்கு பின் பும்ரா இந்திய அணிக்கு திரும்பிஉள்ளதால் அவர் எப்படி விளையாடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இதனையடுத்து, போட்டி இன்று இரவு தொடங்கப்படவுள்ள நிலையில், பயிற்சி எடுத்துவரும் பும்ப்ரா மீண்டும் விளையாட வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய பும்ரா ” 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்னாடி எப்படி சென்றேனோ அதே பும்ராவாக தான் இப்போதும் இருக்கிறேன். என் மீது எனக்கு அதிகமாக நம்பிக்கை இருக்கிறது.
நான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) பயிற்சி செய்துகொண்டிருந்த சமயத்தில் நிறைய வீரர்களை சந்தித்தேன். வீரர்களைச் சந்திப்பது நன்றாக இருந்தது. விளையாடமல் பயிற்சி செய்த காலகட்டத்தில் அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதை நான் பின்பற்றி கொண்டு தான் இருந்தேன்” எனவும் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய ஜஸ்பிரித் பும்ரா ” நான் கிரிக்கெட் விளையாடாமல் ஓய்வில் இருந்த காலத்தில் கிரிக்கெட்டை மிகவும் மிஸ் செய்தேன். ஆனால் முன்னாடி எந்த அளவிற்க்கு உடற்தகுதியோடு விளையாடினேனோ அதே தகுதியுடன் இப்போது இருப்பதாக உணர்கிறேன். இவ்வளவு மாதங்கள் விளையாடாமல் இருந்ததால் பசியுடன் இருக்கிறேன். கண்டிப்பாக வரும் போட்டிகளில் நன்றாக அந்த பசிக்கு ஏற்றது போல விளையாடுவேன் ” எனவும் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்திற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இன்று முதல் இந்த போட்டி துவங்க உள்ளது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி துவங்கும். இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா ஜெயல்படுகிறார் துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் துணைக்கேப்டனாக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…