ICC World Cup 2023: உலகக் கோப்பைக்கான இறுதியான இந்திய அணி அறிவிப்பு.. முழு விபரம் உள்ளே!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இறுதியான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அக்.5ம் தேதி தொடங்கி நவ.19ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கிறது.
உலக கோப்பை தொடருக்காக இந்தியா உள்ளிட்ட அனைத்து அணிகளும் தங்களது வீரர்கள் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டன. உலககோப்பை தொடர்கான அணியை இறுதி செய்வதில் இன்று தான் கடைசி நாள் ஆகும். அதனால் தற்போது, ஒருசில அணியில் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் சேர்க்கப்பட்டு, புதிய இறுதியான அணிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த செப். 5ம் தேதி தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கரால் அறிவிக்கப்பட்டது. இதில், ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இருப்பினும், இந்திய அணியில் வலது கை சுழற் பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை என்று கேள்வி எழுந்தது, அதனால் தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வினை சேர்க்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை எழுந்தது. ஆனாலும், நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. அக்சர் பட்டேலுடன் இந்திய அணி விளையாடியது. ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்பு அக்சர் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டது.
ஏற்கனவே அவருக்கு சில காயங்கள் இருந்த நிலையில் மேலும் இது ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி 2 போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், உலகக்கோப்பை தொடரில் அஸ்வின் இடம்பிடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்டது. அதுவும், உலகக்கோப்பைக்கான இந்திய அணியுடன் தஹ்ரபோது அஸ்வின் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இறுதியான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காயம் காரணமாக விலகிய ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கு பதிலாக, மற்றொரு ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். இது அணிக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், உலகக்கோப்பை அணியில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டதற்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
எனவே, ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் முதல் ஆட்டம் அக்.8ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதேபோல, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி அக்.14ம் தேதி அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
உலகக் கோப்பைக்கான இறுதி இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
???? BREAKING: India make late change to #CWC23 squad with all-rounder set to miss out due to injury!
Details ????https://t.co/oa6htByQmz
— ICC (@ICC) September 28, 2023