#image_title
ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலியும், பாஃப் டு பிளெசீயும் களமிறங்கினர். எதிர்பாராத விதமாக பாஃப் டு பிளெசீ 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஃபார்மில் இருந்த விராட் கோலி கொல்கத்தா அணி பந்து வீச்சை பவுண்டரிகள் பறக்க விட்டார்.
அவருடன் கேமரூன் கிரீனும் பொறுப்புடன் விளையாடனார், இதனால் பெங்களுரு அணி ஸ்கோர் உயர தொடங்கியது. களத்தில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஆனாலும், மற்ற வீரர்களின் மெதுவான ஆட்டத்தால் பெங்களூரு அணியின் ஸ்கோர் கூடினாலும் உயராமலே இருந்தது.
பெங்களூரு அணியில் அதிரடி காட்டுவார் என களமிறங்கிய மேக்ஸ்வெல்லும் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் தனி ஒரு ஆளாக நின்று விராட் கோலி ஆட்டமிழக்காமல் ஆர்சிபி ஸ்கொரை உயர்த்தி கொண்டிருந்தார். இறுதி கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கும் விராட் கோலியுடன் அதிரடி காட்ட பெங்களூரு அணி நல்ல ஸ்கொரை பதிவு செய்தது.
இறுதியில், 20 ஓவருக்கு பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் விராட் கோலி 58 பந்துகளுக்கு 83* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணியில் ஹாஷித் ராணாவும், ரஸ்ஸல்லும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதன் மூலம் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது கொல்கத்தா அணி.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…