விக்ரம் ரத்தோர்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியிலும், இதற்கு முன் வங்கதேச அணியுடனான பயிற்சி போட்டியிலும் சரி இந்திய அணியின் பேட்டிங்கில் 3-வதாக ரிஷப் பண்ட் களமிறங்கி அசத்தி வருகிறார்.
அயர்லாந்து அணியுடனான போட்டியில் விராட் கோலி 1 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறிய போது ரிஷப் பண்ட் களமிறங்கி 26 பந்துக்கு 36 ரன்கள் எடுத்து அசத்தினார். அதே போல தான் பயிற்சி போட்டியிலும் ஒரு அரை சதம் அடித்து கலக்கினார். இதற்கு முன் இந்திய அணியில் அவர் 4-வது அல்லது 5வது தான் களமிறங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அன்று அயர்லாந்து அணியுடனான போட்டி முடிவடைந்த பிறகு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான விக்ரம் ரத்தோர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இதனை குறித்து அவர் பேசும் போது, “ரிஷப் பண்ட் தான் எங்கள் அணியின் தற்போதைய 3-வது பேட்டிங் வரிசை வீரர் அதில் மாற்றம் எதுவும் இல்லை. மேலும், அவரும் அந்த இடத்தில் நன்றாக பேட்டிங் செய்கிறார்.
அவர் 3-வதாக களமிறங்கும் போது பேட்டிங் டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் ஒரு கூடுதல் பலனாக அமையும். அது மட்டுமின்றி ஒரு ஆல்-ரவுண்டருக்கும் அணிக்குள் இடம் கிடைக்கிறது. இதனால் தான் ரிஷப் பண்ட் 3-வது களமிறங்குகிறார்”, என்று அவர் பேசி இருந்தார்.
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…