கடைசி டி20: ருத்ராதாண்டவம் ஆடிய ஷர்துல்…ராகுல்..தவான் அசத்தல்…இலங்கைக்கு 202 ரன்கள் இலக்கு..

Published by
kavitha
  • ஷர்துல் தாகூர் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 201 ரன்கள் குவித்தது.
  • இலங்கைக்கு 202 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று புனேவில் நடைபெற்றது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்ட காரணத்தால் அப்போட்டி கைவிடப்பட்டது.இரண்டாவது டி20  போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று. 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்த நிலையில் தொடரை கைப்பற்றும் நோக்கத்தில் இந்தியாவும்-சமன் செய்யும் நோக்கில் இலங்கையும் இன்று களமிரங்கியது.இதில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனால் இந்திய அணி பேட்டிங்க் செய்ய களமிரங்கியது.

Image

இந்திய அணிக்கு ராகுல்-தவான் ஜோடி சிறப்பான ஒரு துவக்கம் கொடுத்தது.இலங்கை அனியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். அதன் பின் சந்தகன் சுழலில் சிக்கிய தவான் (52) ஆட்டமிழக்கவே ராகுல் 54 ரன்கள் எடுத்தார்.

அடுத்து களமிரங்கிய சாம்சன் (6 ),ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் (4) ரன்களிலும் ஆவுட் ஆகிய நிலையில் கேப்டன் (26) ரன்னில் அவுட்டானார். அதன் பின் களமிரங்கிய வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகி அதிர்ச்சி  தந்த நிலையில் கடைசி கட்டத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி காட்டி  விளாசவே கிடுகிடுவென ரன்கள் உயர்ந்தது.

20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது.மணிஷ் பாண்டே (31)ர்ன்னிலும் , ஷர்துல் தாகூர் (22) ரன்னிலும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். 202 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி  இலங்கை அணி களமிரங்க உள்ளது.

Published by
kavitha

Recent Posts

மதுரையில் மாநாடு.., தவெக தலைவர் விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு.!

சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…

48 minutes ago

சரோஜா தேவி மறைவு – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இரங்கல்!

கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…

1 hour ago

இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி – நடிகர் கமல் உருக்கம்.!

சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…

2 hours ago

சரோஜாதேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது…மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

3 hours ago

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா விளக்கம்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…

3 hours ago

நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

4 hours ago