257 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை 2-0 கைப்பற்றியது இந்தியா

Published by
Dinasuvadu desk

முதல் இன்னிங்கிஸ் :

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்து வீச முடிவு செய்தது அதன்படி களமிறங்கியது இந்தியா.முதல் இன்னிங்சில் ஹனுமான் விஹாரி(111) அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். கோலி ,அகர்வால் ,இஷாந்த் சர்மா அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர்.முதல் இன்னிங்சில் இந்தியா  416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது .

பும்ரா ஹாட்ரிக் :

அதன் பின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய  வெஸ்ட் இண்டீஸ்  இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்களுக்கு சுருண்டது.இதில் பும்ராவின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது 6 விக்கெட்களை வீழ்த்தினார். அவரின் பந்தை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர் .பும்ரா டேரன் பிராவோ, ஷமாரா புரூக்ஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரது விக்கெட்டை ஹாட்ரிக்காக எடுத்தார்.இதன் மூலம் டெஸ்ட் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார் .

2வது இன்னிங்கிஸ் 

பின்பு 2வது  இன்னிங்சில் 299 ரன்கள் முன்னிலை பெற்று விளையாட தொடங்கியது இந்திய அணி அதில் தொடக்க ஆட்டக்கார்களான லோகேஷ் ராகுல் மற்றும் மாயங்  அகர்வால் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர் .பின்பு களமிறங்கிய புஜாரா 27 ரன்களுக்கும் கோலி முதல் பந்திலே ரன் ஏதும் எடுக்காமல் ரோச் வீசிய பந்தில் ஜே ஹாமில்டனிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றத்தை அளித்தார்.

ரஹானே மற்றும்  ஹனுமான் விஹாரி அரைசதம் அடித்தனர் .பின்பு கேப்டன் கோழி 168 ரன் அடித்திருந்த பொழுது டிக்ளர் செய்வதாக அறிவித்தார் .இதனால் வெஸ்ட் இண்டீஸ் 468 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது முதல் இன்னிங்ஸ் போல் இந்திய அணியின் ஆக்கிரோஷமான பந்து வீச்சு தொடர்ந்தது .இதனால் வெஸ்ட் இண்டீஸ் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது .வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷமர் ப்ரூக்ஸ் மட்டும் அரை சதம் அடித்தார் .

இதன் மூலம் இந்தியா 257 ரன்கள் வித்யாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது .

Published by
Dinasuvadu desk

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

10 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

10 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

11 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

11 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

12 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 hours ago