இந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டிக்காக ரோகித் சர்மாவிடம் 2 டிக்கெட்டுகளைக் கேட்ட ரசிகர்.
நேற்று முன்தினம் அபுதாபியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது, மும்பை கேப்டன் ரோகித் சர்மாவிடம் ரசிகர் ஒருவர் ” இந்தியா மற்றும் பாகிஸ்தான் டி 20 உலகக்கோப்பை (IND vs PAK) போட்டிக்கான 2 டிக்கெட்டுகள் தேவை ப்ளீஸ் என பதாகை மூலம் கோரிக்கை வைத்தார்.
இந்த புகைப்படம் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. மேலும், இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிகளவில்வைரலாகி வருகிறது. வருகின்ற 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்காக உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையில், இந்தியா தனது முதல் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது.
அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும் இந்த போட்டி குறித்து ரசிகர்களின் மத்தியில் ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெறும் இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன. ரோஹித் சர்மா தனது ரசிகரின் கோரிக்கையை நிறைவேற்றுகிறாரா..? இல்லையா..? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…