இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 148.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், முதலில் இந்திய அணி பெட்டிங் செய்தது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 61.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 290 ரன்கள் எடுத்தனர். இதனால், இங்கிலாந்து அணி 99 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்க்ஸை தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க வீரராக ரோகித் சர்மா, கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.
2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 16 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 43 ரன்கள் எடுத்து இருந்தனர். நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் கே.எல் ராகுல் ரோகித் சர்மா, புஜாரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா சதம் விளாசி 127 ரன்கள் குவித்தார். புஜாரா 61, கே.எல் ராகுல் 46 ரன்கள் எடுத்தனர்.
நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 92 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 270 ரன்கள் எடுத்து 171 ரன்கள் முன்னிலையில் இருந்தனர். இன்றைய 4-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதும். களமிறங்கிய சிறிது நேரத்திலே ரஹானே ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். பின்னர், அணியின் கேப்டன் கோலி, ஜடேஜா இணைந்து சற்று ரன் உயர்த்தினர். ஒரு புறம் கோலி அடித்து விளையாட மறுபுறம் ஜடேஜா நிதானமாக விளையாடி வந்தார். கோலி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 44 ரன்னில் கிரேக் ஓவர்டனிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் மத்தியில் இறங்கிய பண்ட், ஷர்துல் தாக்கூர் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர். இவர்களின் விக்கெட்டை பறிக்க இங்கிலாந்து அணி திணறியது. இவர்கள் இருவரும் 110 ரன்கள் எடுத்தனர். அதில் பண்ட் 50, ஷர்துல் தாக்கூர் 60 ரன் எடுத்தார். இதையெடுத்து இறங்கிய பும்ரா 24, உமேஷ் யாதவ் 25 ரன்கள் எடுத்தனர்.
இறுதியாக இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 148.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர். இதனால், இந்திய அணி 367 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் 3, மொயீன் அலி, ஒல்லி ராபின்சன் தலா 2, கிரேக் ஓவர்டன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோ ரூட் தலா 1 விக்கெட்டை பறித்தனர். தற்போது இங்கிலாந்து அணி 368 ரன்கள் இலக்குடன் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கவுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…