இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள இங்கிலாந்து அணி, தற்பொழுது 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனால் இந்திய அணி, அடுத்த டுத்து நடைபெறும் போட்டிகளில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக முதல் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் போட்டியை காண 15,000 ரசிகர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியது.
இதனால் பெரும் வரிசையில் நின்று, ரசிகர்கள் டிக்கெட்டினை வாங்கி சென்றனர். மேலும், நீண்ட நாட்களுக்கு பின் இந்தியாவில் ரசிகர்களுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த டெஸ்டிலும் தோல்வியடைந்தால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக ஐந்தாம் முறையாக டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்திக்க நேரிடும்.
மேலும் இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. அதுமட்டுமின்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கு கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி களமிறங்குகிறது. இதனால் இரண்டாம் டெஸ்ட் விறுவிறுப்பாக செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…