இந்தியா – இலங்கை இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் அதிரடியாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடிய ரோஹித் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 56 பந்தில் 89 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடிய 25 பந்தில் அரைசதம் விளாசி 57* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். 200 ரன்கள் இலக்குடன் இலங்கை களமிறங்கியது.
200 ரன்கள் என்கிற டி20 இமாலய இலக்கை எட்டமுடியாமலும், நமது இந்திய பவுலர்களின் சூழல் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமலும் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற வண்ணம் இருந்தனர்.
தொடக்க ஆட்டக்காரரான பாதும் நிஷன்கா டக்அவுட்டாகி வெளியேறினார். கமில் மிஸ்ரா 13, ஜனித் 11, தினேஷ் சண்டிமால் 10 என தொடர்ந்து வெளியேறினார், கேப்டன் தசன் ஷனகா 3 ரன்னில் வெளியேற, சாமிகா 21ரன்னில் வெளியேறினார். சாரித் அசாலன்கா மட்டும் 53 ரன்களுடனும், துஷ்மந்தா 24 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர்.
இறுதியில், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து இலங்கை அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் டி20 போட்டியை 62 என்கிற பெரிய வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில்…
லண்டன் : ஷுப்மான் கில் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…