பேட்டிங்க்-பவுலிங் மிரட்டிய இந்தியா..தொடரை கைப்பற்றி அபார வெற்றி

Published by
kavitha
  • இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் எடுத்து தோல்வி
  • 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி தொடரையும் கைப்பற்றியது.

 

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று புனேவில் நடைபெற்றது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்ட காரணத்தால் அப்போட்டி கைவிடப்பட்டது.இரண்டாவது டி20  போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று. 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்த நிலையில் தொடரை கைப்பற்றும் நோக்கத்தில் இந்தியாவும்-சமன் செய்யும் நோக்கில் இலங்கையும் இன்று களமிரங்கியது.இதில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனால் இந்திய அணி பேட்டிங்க் செய்ய களமிரங்கியது.இந்திய அணிக்கு ராகுல்-தவான் ஜோடி சிறப்பான ஒரு துவக்கம் கொடுத்தது.இலங்கை அனியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். அதன் பின் சந்தகன் சுழலில் சிக்கிய தவான் (52) ஆட்டமிழக்கவே ராகுல் 54 ரன்கள் எடுத்தார்.

Image

அடுத்து களமிரங்கிய சாம்சன் (6 ),ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் (4) ரன்களிலும் ஆவுட் ஆகிய நிலையில் கேப்டன் கோலி (26) ரன்னில் அவுட்டானார். அதன் பின் களமிரங்கிய வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகி அதிர்ச்சி  தந்த நிலையில் கடைசி கட்டத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி காட்டி  விளாசவே கிடுகிடுவென ரன்கள் உயர்ந்து 202 ரன் களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்பின் களமிரங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்திலே ஆட்டவீரர்களை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் 123 ரன்கள் எடுத்து இருந்த இலங்கையை 15.5 ஓவர்களில் சுருட்டிய இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.பந்து வீச்சில் பும்ரா மற்றும் சைனி, ஷர்துல் தாகூர் ஆகியோரின் பந்துகளில் இலங்கையை சுருட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் இந்தியா 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

Published by
kavitha

Recent Posts

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

23 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

59 minutes ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

1 hour ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

1 hour ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago