NatarajanCricketAcademy [Image source : Twitter/@Kishoreamutha]
சின்னப்பம்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள, நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தன்னுடைய சொந்த ஊரான சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை சொந்தமாக கட்டியுள்ளார். இந்த மைதானத்தின் திறப்பு விழாவிற்கு தினேஷ் கார்த்திக், அசோக் சிக்மானி, ஷ. ஆர்.ஆர். பழனி, கே.எஸ். விஸ்வநாதன், உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
இந்த நடராஜன் கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா ஜூன் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்துள்ளார்.
இந்த மைதானத்தில் 4 பிட்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் போட்டியை காண 100 பேர் அமரக்கூடிய வகையில் இடமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நடராஜன் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (TNPL) திருச்சி அணியில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…