ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இருந்து விஹாரி விலகினார்.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 3 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால் தற்போது இரு அணிகளும் சமமான புள்ளிகளுடன் உள்ளன. இதற்கு முன் நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விஹாரி விலகியுள்ளார். இதற்கு முன் வயிற்று வலி காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜஸ்பிரீத் பும்ராவும் விலகியுள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அதிக வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
3-வது டெஸ்ட் போட்டியில் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டது. ஆனால் ரவீந்திர ஜடேஜா விளையாடவில்லை, பண்ட் விளையாடினார். மேலும், இந்தத் தொடரின் போது முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் காயம் அடைந்தனர்.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இப்போட்டி தி கப்பா, பிரிஸ்பேன் என்ற மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…