இந்திய அணிக்கு பயிற்சி இல்லாததால் பாதிப்பு ஏற்படும் என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இப்போட்டியில் தவான் தலைமையிலான இந்திய அணியில் புதுமுகங்கள் நிறைந்த வீரர்கள் சென்றுள்ளன. இப்போட்டியில் சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், படிக்கல் ஆகியோருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல இலங்கையிலும் முக்கிய வீரர்கள் இல்லாமல் விளையாடுகின்றனர். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது.
முன்னாள் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறுகையில், இலங்கை அணி சமீபத்திய காலங்களில் சிறப்பாக விளையாடியதில்லை, ஆனால் அவர்கள் பல போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்திய அணி ஐபிஎல் 2021 மே மாத தொடக்கத்தில் ஒத்திவைக்கப்பட்டதிலிருந்து வீரர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. இலங்கை அணி சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து திரும்பியது.
அங்கு அவர்கள் மூன்று டி 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடினர். இந்தியா அண்மைய காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பதே இந்திய அணிக்கு ஒரு குறையாக தெரிகிறது. ஷிகர் தவான் தலைமையிலான இந்தியாவை இரண்டாவது அணியாக கருதக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இது வழக்கமான இந்திய அணியில் சிறப்பாக செயல்படும் வீரர்களைக் கொண்டுள்ளது. ஐபிஎல்லில் சிறந்த அனுபவத்துடன் விளையாடிய அனுபவம் வீரர்களுக்கு இருப்பதாக அவர் கூறினார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…